×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கபிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதத்திற்கான அங்க பிரதட்சண இலவச டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பர் மாதத்தில் அங்கபிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் ஆன்லைனில் 25ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்’ என அதில் கூறப்பட்டுள்ளது. ரூ.4.68 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 74,354 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 23,931 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.68 கோடியை காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 3 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

Tags : Tirupati Eyumalayan Temple , Angapradhatsana tickets at Tirupati Eyumalayan Temple will be released online tomorrow
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...