பனிவரகு பிரெட் கட்லெட்

செய்முறை:

பனிவரகை வேகவைத்துக் கொள்ளவும். பிரெட்டை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பின்பு, வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் சேர்க்கவும். பின்னர் அதில் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வேகவைத்த பனிவரகு, பிரெட் தூளைச் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும்.

கரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றைத் தேவையான நீர்விட்டு பஜ்ஜி மாவைவிட சற்றுத் தளர்வான பதத்தில் கரைத்து வைக்கவும். பின்னர், ஆறிய உருளைக்கிழங்கு - பனிவரகு கலவையை விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாகச் செய்து அவற்றைக் கரைத்து வைத்த மாவில் தோய்க்கவும்.

பின்னர், அவற்றை ரஸ்க்தூள் (அ) கான்கிரஞ்ச் தூளில் புரட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு புரட்டிவைத்திருக்கும் கட்லெட்டைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு இரண்டு பக்கங்களிலும் சிவக்க சுட்டெடுக்கலாம்.

Related Stories: