×

சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி

செய்முறை:

கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, மஞ்சள்தூள் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவைவிட இலகுவாகப் பிசைந்துகொள்ளவும். இத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து மீண்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பூரணம் செய்முறை:

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்க்கவும். அதன் மேல் இட்லித் தட்டைவைத்து அதில் கிழங்கை சேர்த்து 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு சூடாக்கி அதில் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இரண்டு நிமிடங்கள் கழித்து, அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நன்கு உருகியவுடன் ஏலக்காய்த் தூள் மற்றும் மசித்த கிழங்கையும் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

இப்போது பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி போல சிறிது திரட்டி அதில் கிழங்கு கலவை உருண்டையை நடுவில் வைத்து மறுபடியும் நன்கு உருட்டிக்கொள்ளவும். இந்த உருண்டையை மெதுவாக சப்பாத்தி அளவுக்கு நன்கு திரட்டவும். இதை நெய்விட்டு சுட்டெடுத்தால் போளி தயார்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!