சில்லி இறால் மசாலா

செய்முறை:

 

இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து வதக்கவும்.பச்சை வாசனை நீங்கியதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,  கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். எண்ணெய் தனியாக பிரிந்தவுடன் இறாலை சேர்த்து கிளறவும்.முக்கால் பாகம் வெந்தவுடன் தேங்காய்பால் சேர்க்கவும்.இறால் வெந்து மசாலா கெட்டியானவுடன் மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இறால் சில்லி மசாலா தயார்.

Related Stories:

>