மட்டன் கட்லெட்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்கு மசித்துக்கொள்ளவும். கொத்துக்கறியை அல்லது எலும்பு இல்லாத மட்டனை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அரைத்த மட்டனுடன் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், மட்டன் கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக்கி, முட்டைக் கலவையில் முக்கி எடுத்து, ரொட்டித் தூளில் இருபுறமும் பிரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் சேர்த்து பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும். மட்டன் கட்லெட்டுக்கு தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி  பொருத்தமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

Related Stories: