பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் காஞ்சி அருகே உலக அமைதிக்காக கூட்டு தியானம்: தெலங்கானா கவர்னர், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், உலக அமைதிக்காக கூட்டு தியானம் காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் நாளை நடைபெறுகிறது. இதில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில் ஊடகப்பிரிவு தலைவர் கருணா, திருவண்ணாமலை உமா, தமிழ் துறை ஜெயக்குமார், காஞ்சிபுரம் பொறுப்பாளர் அகிலா பாண்டியராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில், தமிழ்நாடு மண்டலமானது தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலக அமைதிக்காக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் கூட்டு தியானம் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் ஹேப்பி வில்லேஜியில் ரிட்ரீட் சென்டர்கள் நடைபெறுகிறது.

50 ஆண்டுகளாக 147 நாடுகளில் சேவையாற்றி வரும் பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் சேவைப் பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், உலக அமைதிக்காக கூட்டு தியானம் சென்னையில் 8ம் தேதியும் (இன்றும்),  காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ஹாப்பி வில்லேஜியில் 9ம் தேதியும் (நாளை) நடைபெறுகிறது, இதில், தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். மேலும், நாங்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றி வந்திருக்கிறோம். ஆனால், வட இந்தியாவான கல்கத்தாவில் காளிபூஜை சிறப்பானது. அதுப்போல, தென்னிந்தியாவில் மீனாட்சி அம்மனுக்கு பழமையிலும் பழமை மாறாமல் பாரம்பரியமிக்க வழிபாடு சிறப்பானது.

உலகம் முழுவதும் பல்வேறு கோயில்களை கட்டினாலும் தென்னிந்தியாவில் இருந்து, தமிழகத்தில் இருந்துதான் பூசாரிகளும், அர்ச்சகர்களை கொண்டுதான் பூஜை செய்யும் அளவுக்கு சிறந்த பூஜை முறைகள் நடைபெறுகிறது. மேலும், உலக நாடுகளிலே அதிக அளவில் சிவன் கோயில் உள்ள பகுதி இந்தியாவில் தமிழ்நாடு என்பதும் போற்றுதலுக்கு உரியதாகும். ஆகவே, இறைவன் ஒருவனே உலக நாடுகள் அனைத்தும், ஒரு குடையின் கீழ் நாம் அனைவரும் சகோதர, சகோதரி என்ற உன்னத நோக்கத்தோடு இந்த பிரம்மக்குமாரிகள் இயக்கம் வெற்றிநடை போட்டு வருகிறது. மக்கள் அனைவரும் பல்வேறு பணிகளில் இருந்தாலும் கூட்டு தியானம் மூலம் சக்திகூடும், வாழ்வில் நல்ல எண்ணங்களும் நல்வழிப்போகும் வாழ்க்கை முறைகளும் மாறும் என்று இதன் மூலம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: