4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்துார் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட நரிகுறவர் குடும்பத்தினர் சாலையோரம் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக இடம் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக படப்பை அருகே செரப்பணஞ்சேரி கிராமத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு 1 குடும்பத்திற்கு 2 சென்ட் இடம் என தலா 40 நரிகுறவர் குடுபத்திற்கு 1.20 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், நரிகுறவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அப்பகுதியில் உள்ள 4.50 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது வருவாய் துறைக்கு தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று மணிமங்கலம் போலீசார் பாதுகாப்புடன், குன்றத்துார் வட்டாட்சியர் கல்யாணசுந்தரம் தலைமையிலான வருவாய் துறையினர் செரப்பணஞ்சேரி கிராமத்திற்கு சென்றனர்.  அப்போது, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசார் பாதுகாப்புடன், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 குடிசை வீடுகளை இடித்து அகற்றி அப்பகுதியில் உள்ள 4.50 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.

Related Stories: