மாதவரம் மண்டலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாதவரத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். மழைக்கால சிறப்பு அதிகாரி சந்திப்நந்தூரி பங்கேற்று, மண்டலம் முழுவதும் நடைபெற்று வரும் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள், மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பொக்லைன் மற்றும் பாதுகாப்பு இயந்திரங்கள், தேவையான ஊழியர்கள் தங்கள் வார்டுகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக மழைக்கால சிறப்பு அதிகாரி சந்திப்நந்தூரி தெரிவித்தார். பின்னர்,  மழைநீர் கால்வாய் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். சாலையோரங்களில் தாழ்வாக நிலையில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும். மின்வாரியம் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்ற அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகளும் இந்த பணிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

Related Stories: