தொடர் மழையின் காரணமாக கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தொடர் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில்  நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பரவலாக ஒருசில இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில், மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும்  கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்துள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு தினமும்  25 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

தற்போது, பொய்த மழையால் நீர் வரத்து அதிகரித்து நேற்றுமுன்திம் இரவு 139 கன அடியை  எட்டியுள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரி முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியை எட்டி முழுமையாக நிரம்பியுள்ளது. தொடர்ந்து 80வது நாளாக ஏரியில் இருந்து 129 கனஅடி உபரிநீர் கலங்கல் வழியே வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த மழை நீர் கொள்ளனுர், பூவலம்பேடு, ஈகுவார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கால்வாய்களில் செல்கின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: