பனிமலர் மருத்துவக்கல்லூரிக்கு கண் அழுத்தம், நரம்பியல் நோய்களை கண்டறிய நவீன கருவி

திருவள்ளூர்: சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் இயங்கி வருகிறது பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். இந்த மருத்துவக் கல்லூரிக்கு சென்னையை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் நோயாளிகளின் பயன்பாட்டிற்க்காக கண் அழுத்தம் மற்றும் நரம்பியல் நோய்களை கண்டறிய தானியங்கி காட்சி புலம் சோதனைக் கருவியை  நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பனிமலர் குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.சின்னதுரை, துணைத்தலைவர் டாக்டர் சி.சக்திகுமார், கல்லூரி முதல்வர் டாக்டர் செ.இளம்பருதி, மருத்துவக்கண்காணிப்பாளர்  டாக்டர் ஆர்.சபாரத்னவேல் ஆகியோர் முன்னிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஹாம்சங் இல், முதன்மை செயல் அலுவலர்  ஜேங்க் சங்க் ஹே ஆகிய இருவரும் இலவசமாக பரிசோதனை செய்வதற்காக நோயாளிகளின் பயன்பாட்டிற்க்காக வழங்கி துவங்கி வைத்தனர்.

இந்த கருவி மூலம் பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கண் மருத்துவ துறையில் கண் புரை நீக்குதல் லென்ஸுடன் மற்றும் பிற கண் அறுவை சிகிச்சைகளும் நோயாளிகளுக்கு இலவசமாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்காக கண் அழுத்தம், நரம்பியல் நோய்களை கண்டறிய தானியங்கி காட்சி புலம் சோதனைக் கருவி வழங்கிய ஹூண்டாய் நிறுவனத்திற்கு பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: