வீட்டை உடைத்து 9 சவரன் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள வீட்டை மர்ம நபர்கள் உடைத்து 9 சவரனை கொள்ளை அடித்து சென்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (55)  கார்பெண்டர்.  இவர், நேற்றுமுன்தினம் இரவு அருகே உள்ள அவருடைய மகள் வீட்டுக்கு இரவு படுக்க சென்றுள்ளார். மீண்டும் காலை தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, தொலைபேசி மூலம் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று நடத்திய விசாரணையில், 9 சவரன் நகை, 1/4 கிலோ வெள்ளி காணமல் போது‌ தெரிய வந்தது. இது குறித்து ராதாகிருஷ்ணன் சிப்காட் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார். வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக  விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Related Stories: