திருநங்கையாக நடிக்கும் சுஷ்மிதா சென்

மும்பை: சுஷ்மிதா சென் தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தார். அதன்பிறகு பாலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வெப் தொடர்களில் அதிகமாக நடித்து வருகிறார். தற்போது அவர் ‘தாஹ்லி’ என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வருபவருமான சவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் உருவாகி வருகிறது. இதை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்கிறார்.

திருநங்கையாக நடிப்பது குறித்து சுஷ்மிதா சென் கூறும்போது, ‘இந்த அழகான பெண்ணின் கதாபாத்திரம் மற்றும் அவரது கதையை உலகிற்கு கொண்டு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக, பெருமையாக கருதுகிறேன். கண்ணியத்துடன் வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு’ என்று கூறியிருக்கிறார். சுஷ்மிதாவின் திருநங்கை தோற்றம் வெளியாகி வைரலாகி வருகிறது. என்றாலும் நிஜமான ஒரு திருநங்கையை நடிக்க வைத்திருக்கலாமே என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். சுஷ்மிதா சென் தேர்ந்த நடிகை என்பதால் அவர் சவுரி சாவந்த் கேரக்டரில் நடித்துள்ளார். அவர் தவிர படத்தில் ஏராளமான திருநங்கைளுக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories: