5 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்தார் பத்மபிரியா

திருவனந்தபுரம்: 2001ல் தனது 18வது வயதில் தெலுங்குப் படம் சீனு வசந்தி லக்ஷ்மி படத்தில் அறிமுகமானார் பத்மப்ரியா. தொடர்ந்து மம்மூட்டியின் மனைவியாக , ஒரு சிறுமியின் தாயாக மலையாள காழ்ச்சா படத்தில் அவர் நடித்தார். தமிழில் தவமாய் தவமிருந்து படத்தில் சேரன் அவரை அறிமுகப்படுத்தினார். பள்ளியில் பிளஸ் 2 படிக்கும்போது, அழகிப்போட்டியில் கலந்துகொண்டார். மிஸ் ஆந்திராவாக தேர்வானார். அதன் மூலம்தான் பத்மபிரியாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. நடிப்பில் பிஸியாக இருந்தபோது அமெரிக்கா சென்று நியூயார்க் யூனிவர்சிட்டியில் டிகிரியை முடித்தார்.

அப்போது தன்னுடன் படித்த ஜாஸ்மின் ஷா என்ற குஜராத்தியை திருமணம் செய்து கொண்டார். 2017க்குப் பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட பத்மபிரியா ஒரு தெக்கன் தள்ளு கேஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். திரையரங்கில் வெளியான இந்த மலையாளப் படம் தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. பிஜு மேனன் நடித்துள்ள இந்தப் படம், ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய அம்மினி பிள்ளை கேஸ் என்ற சிறுகதையை தழுவி இந்தப் படத்தை ஸ்ரீஜித் இயக்கியுள்ளார்.

Related Stories: