சில்லி பாயின்ட்...

* சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்டின் சிறந்த வீரராக இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் (26 வயது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த விருதை தொடர்ந்து 2வது ஆண்டாகப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

* புரோ கபடி தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியுடன் நேற்று மோதிய தபாங் டெல்லி கே.சி. அணி 41-27 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது.

* ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் பும்ரா, ஜடேஜா விளையாட முடியாதது பின்னடைவு தான் என்றாலும், இந்திய அணிக்கு புதிய சாம்பியன் வீரர்கள் கிடைக்க இது அருமையான வாய்ப்பாக இருக்கும் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் வரிசையில் சில வித்தியாசமான வியூகங்களை முயற்சி செய்தது பலனளிக்கவில்லை. அதுவே தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியுள்ளார்.

* போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகில் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்களுக்கான பட்டியலில் நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி கிலியன் எம்பாப்பே முதலிடம் பிடித்துள்ளார்.

* லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர், உலக அளவிலான உள்ளூர் டி20 போட்டிகளிலும் தங்கள் அணிகளின் ஆலோசகராக செயல்படுவார் என ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமம் அறிவித்துள்ளது.

* பிலிப்பைன்ஸ் குத்துச்சண்டை வீரர் மேன்னி பாக்கியோவுக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: