தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 17ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் துணைநிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்பதே அரசின் எண்ணம். விரைவில் நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். ஓபிஎஸ், இபிஎஸ் அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பிடம் விளக்கம் கேட்பது ஆய்வில் உள்ளது. இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும் போது தெரிய வரும். எனக்கு இவர்கூட சண்டை.. அவர் பக்கத்துல உட்கார முடியாதுன்னு எல்லாம் சட்டப்பேரவைல சொல்ல முடியாது. ஓ.பன்னிர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தவர்கள்; கண்ணியமாக நடந்து கொள்வார்கள். இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரபுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.

Related Stories: