பாலிவுட் மூத்த நடிகர் மரணம்

மும்பை: பாலிவுட் மூத்த நடிகர் அருண் பாலி என்பவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இறந்தார். பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அருண் பாலி (79), மும்பை புறநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவர் ஏற்கனவே நரம்பு மற்றும் தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மயஸ்தீனியா கிராவிஸ் என்ற  ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது மகன் தெரிவித்தார். இந்த ஆண்டு  தொடக்கத்தில் இருந்தே தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறினார். அருண் பாலியின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ள அருண் பாலி, கடைசியாக நடிகர் அமீர் கானின் ‘லால் சிங் சதா’ படத்தில் நடித்தார். மேலும் அமீர் கானின் ‘3 இடியட்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார். கடந்த 1989ல் ‘தூஸ்ரா கேவல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் திரை உலகில் அறிமுகமான அருண் பாலி, ‘ஸ்வாபிமான்’ போன்ற தொடர்களில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: