மேல் மாடியில் குழந்தை அழுததால் எரிச்சல்; மோடியை கொல்ல வீட்டுக்குள் சதி: போலீசுக்கு டென்ஷன் கொடுத்தவர் கைது

புனே: பிரதமர் மோடியை கொலை செய்யவும்,  புனே மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வைக்கவும் சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று ேபாலீசுக்கு போன் செய்தவர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, மர்ம நபர் போன் செய்தார். எதிர்முனையில் பேசிய அவர், ‘பிம்பிரி சின்ச்வாட் தெகு ரோடு பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி  குடியிருப்பில் பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்படுகிறது. மேலும்,  புனே மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வைக்கவும் சதி திட்டம் தீட்டப்படுகிறது’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி  குடியிருப்புக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த புகார்  அழைப்பு வெறும் புரளி என்பது தெரிய வந்தது.  மேலும் இந்த புகாரை தெரிவித்தவர், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 38 வயது மதிக்கத்தக்கவர் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை ேபாலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்டவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் மேலே உள்ள ஒரு பிளாட்டில் வசித்தவர்களின் குழந்தை அழுததால், அவர் எரிச்சல் அடைந்துள்ளார். அதனால் அந்த பிளாட்டில் வசிப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டி இப்படி ேபான் மிரட்டல் செய்துள்ளார்’ என்று கூறினர்.

Related Stories: