பெரம்பூர் தொகுதியில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம்: எம்எல்ஏ ஆய்வு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நாள்தோறும் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னை நகரில் பருவமழை துவங்குவதற்கு முன், அனைத்து நீர்நிலைகள் மற்றும மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதன் வழியே மழைநீர் தடையின்றி வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சென்னை மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் முக்கிய கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், கேப்டன் கால்வாய், ஜவஹர் கால்வாய் என 4 முக்கிய இடங்களிலும் கடந்த சில நாட்களாக மாநகராட்சி சார்பில் அதிநவீன இயந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நாள்தோறும் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ மேற்பார்வையில் மண்டல அதிகாரி மதிவாணன், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் உள்பட பல்வேறு மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த 4 கால்வாய்களில் இருந்து வெளியேறும் மழைநீர், கொருக்குப்பேட்டை வழியாக பேசின் பிரிட்ஜ் பகுதிக்கு சென்று, அதன்பின் கடலில் கலந்து வருகிறது. மற்றொரு வழியாக எண்ணூர் முகத்துவாரத்துக்கு சென்று கடலில் கலக்கிறது. வடசென்னையின் 4 பிரதான கால்வாய்களான இவற்றில் ஏற்னெவே 10 நாட்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. எனினும், இன்னும் 20 நாட்களிலும் 4 கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகள் நிறைவு பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: