சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் லிப்ட் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: ஜி.கே. வாசன் கோரிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினம்தோறும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வருகின்றனர். இங்கு அமைந்துள்ள ஒவ்வொரு கட்டடத்திலும் 4 லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் இரண்டு லிப்ட் நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கும், இரண்டு லிப்ட் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும்  ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தினந்தோறும் அதிகமாக நோயாளிகள் வருவதால் இரண்டு லிப்ட் போதுமானதாக இல்லை. வயதானவர்களும், நோயாளிகளும் மாடிப்படிகளில் செல்ல முடியாது. லிப்டில்தான் செல்ல முடியும். இதனால் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.  ஆகவே மேலும் லிப்ட் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதோடு எஸ்கலேட்டர் வசதிகளை (நகரும் படிகட்டுகள்) ஏற்படுத்தினால் தங்குதடையின்றி மேல் தளங்களுக்கு செல்ல ஏதுவாகவும், வசதியாகவும் இருக்கும்.

Related Stories: