திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் தொடங்க உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் உள்ளிட்டவை தூர்வாரும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. திடீரென இரவில் பலத்த மழை பெய்தது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன் விவரம்:

பூண்டி: மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இருப்பு 609 மில்லியன் கன அடி. தண்ணீர் வரத்து 95 கன அடி. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புழல்: மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இருப்பு 2655 மில்லியன் கன அடி. நீர்வரத்து 196 கன அடி‌. வெளியேற்றப்படும் நீரின் அளவு 196  கன அடி.

சோழவரம்: மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. இருப்பு 140 மில்லியன் கன அடி. நீர்வரத்து 26 கன‌அடி.

செம்பரம்பாக்கம்: மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இருப்பு 2850  மில்லியன் கன அடி. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர் வரத்து 203 கன அடி. குடிநீர் தேவைக்காக 145 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கண்ணன் கோட்டை: மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. இருப்பு 500 மில்லியன் கன அடி.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 51 மிமீ மழையும், ஆவடியில் 32 மிமீ மழையும் பெய்துள்ளது. மாவட்டத்தில் பெய்த மழையளவு (மிமீ) விவரம்: பொன்னேரி- 30, ஊத்துக்கோட்டை-30, செங்குன்றம், திருவாலங்காடு- தலா 22, பூண்டி- 21,  சோழவரம்- 19, திருத்தணி-17, திருவள்ளூர் -9, தாமரைப்பாக்கம்-7- மொத்த அளவு 270 மிமீ. சராசரி அளவு 18 மிமீ.மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்னர். ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: