கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நகைச்சுவை நடிகை மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நகைச்சுவை நடிகை ஜூடி டெனுடா லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த ஹாலிவுட் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகை ஜூடி டெனுடா (72), கடந்த சில வருடங்களாக கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நோய் பாதிப்பு அதிகமானதால் சிகிச்சை பலனின்றி லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்.

இவரது மறைவு ஹாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள காமெடி ஸ்டோர், ஹூஸ்டனில் உள்ள லாஃப் ஸ்டாப், நியூயார்க் நகரத்தில் உள்ள கரோலின்ஸ் போன்ற கிளப்களில்  ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி புகழ்பெற்ற ஜூடி டெனுடா, நடிகர் ப்ரூஸ் விலாஞ்சுடன் இணைந்து ‘சிஸ்டர் மேரி’ என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தவர் ஆவார். அமெரிக்காவில் நகைச்சுவைக்காக வழக்கப்பட்ட விருதுகளில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான விருதை முதன்முதலில் ஜூடி டெனுடா வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: