மதுரையில் நகைக்கடை உரிமையாளரிடம் 87 சவரன் நகை கொள்ளை: கடை மேலாளர் உள்பட 5 பேர் கைது

மதுரை: மதுரையில் நகைக்கடை உரிமையாளரிடம் 87 சவரன் நகைகளை கொள்ளையடித்த கடை மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தேனியில் நகைக்கடை நடத்தி வரும் செந்தில்குமார் அவரது நகைக்கு ஹால்மார்க் முத்திரை பதிவு செய்ய மதுரை சென்று காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ராஜகோபால், கடையின் மேலாளர் சாய்பு (50) ஆகியோருடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது, சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது காரில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்ட செந்தில்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.  

Related Stories: