தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு நுழைவுசீட்டு வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் எனத் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் அக்டோபர் 15-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தனர்.  

இந்த நிலையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர் வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பள்ளிகளுக்கான பயனாளர் குறியீடு, கடவுச்சொல் மூலம் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை தாங்கள் பயிலும் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Stories: