குத்தாலம் அருகே அசிக்காட்டில் சிதிலமடைந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் அச்சம்: புதிதாக கட்டித்தர வலியுறுத்தல்

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா அசிக்காடு ஊராட்சி அய்யனார் கோவில் தெருவில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது ரேசன் கடை கட்டிடம் சிதிலமடைந்து கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரியும் வண்ணம் காணப்படுகிறது. இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ரேஷன் கடையை இடித்து அப்புறப்படுத்தி புதிதாக கட்டிடம் கட்டி தரவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ரேஷன் கடை மிக அருகில் அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், அய்யனார் கோவில், அங்கன்வாடி மையம், புதுவாழ்வு திட்ட மையம், உள்ளிட்டவை உள்ளது. இப்பகுதிகளுக்கு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் கட்டிடம் இடிந்து விழுந்தால் மிகுந்த அளவில் உயிர் சேதம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடை கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் எனவும், தற்போது இந்த ரேஷன் கடை ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. எனவே ரேஷன் கடையை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: