சென்னை இராயபுரத்தில் வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்ட பணி: அமைச்சர் கே.என்,நேரு தொடங்கி வைத்தார்..

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரூ13.40 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்ட பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் இன்று (07.10.2022) தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆகியோர் இன்று (07.10.2022) பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் இரயில்வே சந்திக்கடவு 11A ல் ரூ13.40 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்ட பணியினை இன்று (07.10.2022) தொடங்கி வைத்தனர்.பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், போஜராஜன் நகரில் இரயில்வே சந்திக்கடவு 11A ல்  அமையவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப் பாதை திட்ட பணியின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி. இந்த சுரங்கப்பாதையின் மொத்த நீளம்  207 மீ, அகலம் 6 மீட்டர். இதில் 37 மீட்டர் இரயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர்  பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பிலும் அமைக்கப்படவுள்ளது.

இதில் இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் 37 மீட்டர் நீளத்திற்கான பணியை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதியிலிருந்து ரூ.6.60 கோடி ஏற்கனவே இரயில்வே நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இப்பணி முடிவுற்றுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.13.40 கோடி மதிப்பில் மூலதன மானிய நிதியின்கீழ் 170 மீட்டர் நீளத்திற்கு அணுகு சாலை அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு,  திட்ட பணியானது இன்று அமைச்சர் பெருமக்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர். பிரியா, வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி, துணை மேயர். மு.மகேஷ் குமார், முதன்மை செயலாளர்/ ஆணையாளர் . ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நகரமைப்பு நிலைக்குழுத் தலைவர் இளைய அருணா, துணை ஆணையாளர்கள் எம்.எஸ். பிரசாந்த், இ.ஆ.ப., (பணிகள்), எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), மண்டலக்குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, தலைமைப் பொறியாளர் (பாலங்கள்) எஸ்.காளிமுத்து, மாமன்ற உறுப்பினர்கள் சு.கீதா, பா. வேளாங்கண்ணி, மண்டல அலுவலர் மற்றும் செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: