பட்டர் சிக்கன் மசாலா

செய்முறை:

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தயிர், கறிமசாலா, உப்பு, கசூரி மேத்தி, சிவப்பு கலர் இவற்றை நன்கு கலந்து சிக்கனில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சிக்கனை நன்றாக வேக வைக்கவும். மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். கடாயில் வெண்ணையை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி இவை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். சிக்கன் ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும். தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து கிளறவும். பின்னர் மிதமான தீயில் வேக விடவும். பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கு முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையான பட்டர் சிக்கன் மசாலா ரெடி. இது புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

Related Stories: