தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற தமிழக அரசால் தேர்வு

* அறுவை சிகிச்சை, கதிரியக்கவியல் உள்ளிட்ட பல்வேறு  பிரிவுகளில் சிறந்த மருத்துவம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ பிரிவு, குழந்தை, மருத்துவம், அறுவை சிகிச்சை, நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, எலும்பியல், உளவியல், காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம், காசநோய் மையம், கதிரியக்கவியல், விபத்து, மத்திய ஆய்வகம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய தரச்சான்று பெறுவதற்கு தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை கடந்த 2004ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கிராமபுறங்களுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 1500 முதல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை. இந்த மருத்துவமனை பல்வேறு துறைகளில் சிறப்பாக ெசயல்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு மகப்பேறு மருத்துவ பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மகப்பேறு மருத்துவ பிரிவு மத்திய அரசால் தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு சேவை நிலையம் செயல்பட்டு வருகிறது. மகப்பேறு சிகிச்சை பிரிவில் தரம் உயத்தப்பட்ட நிலையமாக உள்ளதால், மகப்பேறு இறப்பு, பச்சிளம் குழந்தைகள் இறப்பு வெகுவாக குறைந்துள்ளது. மகப்பேறு

காலத்தில் ரத்தபோக்கு, ரத்த கொதிப்பு இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. திருச்சி, திருநெல்வேலி, தேனி என 3 மருத்துவமனைகளில் ஒன்றாக கடந்த 2019 டிசம்பர் மாதம், லாக்ஷா பிளாட்டினம் சான்றிதழ் இந்த மகப்பேறு மருத்துவ பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் மனிதனுக்கு இன்றியமையாதது. அதுவும் மருத்துவம் சார்ந்து வரும்போது, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த கொரோனா காலத்தில் இந்த ஆக்ஸிஜன் தேவை எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணருகின்றனர். இதில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டம் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன் செயல்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக தற்போது 3 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் டேக் நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆக்ஸிஜன் தடையின்றி, தட்டுப்பாடின்றி நோயாளிகளுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை பிரிவு மையத்தில் பெரியவர்களுக்கு 18 படுக்கை வசதிகளும், குழந்தைகளுக்கு 12 படுக்கை வசதிகளும் மொத்தம் 30 படுக்கை வசதிகளும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மேம்படுத்தப்பட்டஅதிதீவிர சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஹைடெக் மற்றும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களை கொண்டு இந்த பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் ஒவ்வொரு துறையில் செயல்பாடுகளை மதிப்பீட்டு செய்து, அந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று வழங்கப்படும். அந்த வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான கட்டமைப்பு வசதி, சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், தேனி, கன்னியாக்குமரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 4 மருத்துவமனைகளை தேசிய தரச்சான்று பெறுவதற்கு தமிழக அரசு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தேசிய தரச்சான்று வாங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர். மேலும் சிகிச்சை தரத்தை மேம்படுத்துவது, நோயாளிகளின் பாதுகாப்பு, பார்வையாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு, சிகிச்சையின் தரம், மேம்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை செய்திடும் நோக்கத்தில் இந்த தேசிய தரச்சான்று பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மக்களை தேடி மருத்துவம்...

பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் விதமாக தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை துவக்கியது. இதில் சுகாதார ஆய்வாளர்கள், கிராமபுற செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் சக்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நீரழிவு, முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமiiயில் பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் இந்த திட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1.50 லட்சம் நபர்களுக்கு சிகிச்சை அளித்து பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் இந்த மருத்துவமனை 3ம் இடத்தில் உள்ளது.

நம்மை காக்கும் 48!!!

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோர்க்கு, 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 சிகிச்சை திட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கப்பட்டது. சாலை விபத்தில் அடிப்பட்டவர்களை, முதல் 48 மணி நேரத்;தில் அனைத்து சிகிச்சையும் இலவசமாக, உடனுக்குடன் அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேனி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு, தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர மருத்துவ பிரிவின் கீழ் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 மாதங்களில் 3,124 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை லெவல் - 2 பிரிவல் முதலாம் இடத்தில் உள்ளது. இந்த திட்டத்தில் ஒரு பேராசிரியர், அசோசியன் பேராசிரியர், 3 உதவி பேராசிரியர், 12 மருத்துவமனை ஊழியர்கள் உள்ளனர். தீவிர அவசர சிகிச்சை பிரிவு இந்த ஆண்டு முதல் புதிய மேற்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.

Related Stories: