சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் மரியாதை செலுத்தி வருகிறார். அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி, மா.சுப்பிரமணியம், துரைமுருகன், எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்டோர் முதலமைச்சருடன் மரியாதை செலுத்தினர்.

Related Stories: