அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி..!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே இந்தியாவில் லாடற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்து தினமும் ஒரு வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 81.90 காசுகளாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மேலும் 32 காசுகள் வீழ்ச்சி அடைந்து டாலர் ஒன்று 82 ரூபாய் 22 காசுகள் என்ற புதிய வரலாற்று வீழ்ச்சியை கண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.80 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்திய பங்குச் சந்தைகள் சற்று சரிவுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190 புள்ளிகளை இழந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃடியிலும் புள்ளிகள் சரிந்து காணப்படுகின்றன.

Related Stories: