பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை மேடவாக்கத்தில் மாநகர பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவன் ஆர்யா (14) உயிரிழந்துள்ளார். கடந்த செப்டம்பர் 8-ம் தேதி படிக்கட்டில் தொங்கியபடி சென்றபோது தவறி கீழே விழுந்து டயரில் சிக்கி மாணவன் பலத்த காயமடைந்தார். சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவன் ஆர்யா இன்று உயிரிழந்துள்ளார்.

Related Stories: