ஏசி கம்ப்ரசர் வெடித்து விபத்து மருத்துவமனையில் 2 பேர் பலி

சென்னை: கிண்டியில் ஏசி கம்ப்ரசர் வெடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகினர். கிண்டி அம்பேத்கர் நகரில் உள்ள தனியார்  நிறுவனத்தில்  பழுதடைந்த  குளிர்சாதன பெட்டியினை பழுதுபார்க்க கடந்த 30ம் தேதி, ஜாபர்கான் பேட்டையில் ஏசி பழுது பார்க்கும் கடை  நடத்தும் சின்னதுரை(45) என்பவர் தன்னுடன் வேலை பார்க்கும் மதுரவாயலை சேர்ந்த இந்திரகுமார்(40), கோடம்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (41) ஆகியோருடன் அந்த தனியார் நிறுவனத்தில் பழுது பார்க்க சென்றனர். 3வது மாடியில் இருந்த ஏசி அவுட்டோர் கம்ப்ரசரை பழுதுபார்த்தபோது காஸ் கசிந்து வெடித்தது.  

இதில், ஏசி மெக்கானிக்குகள்  சின்னதுரை(48), இந்திரகுமார்(22), சரவணன்(42) ஆகிய 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சின்னதுரை, இந்திரகுமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இந்திரகுமார்  இறந்தார். மேலும் நேற்று மாலை சின்னதுரையும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: