பெரம்பூரில் 2 பஸ் நிறுத்தங்களில் ரூ.22 லட்சத்தில் நிழற்குடை பணி: எம்பி தொடங்கி வைத்தார்

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் பகுதியில் பேருந்து நிழற்குடை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருக்கிறது. இதேபோன்று, கொடுங்கையூர் சீதாராம் நகர் பகுதியில் பேருந்து நிழற்குடை கோரி பொதுமக்கள் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமிக்கு வேண்டுகோள் வைத்திருந்தனர்.

அவர்களது வேண்டுகோளை ஏற்று நேற்று காலை மூர்த்திங்கர் நகர் மற்றும் சீதாராம் நகர் ஆகிய 2 இடங்களிலும் வடசென்னை எம்பி மேம்பாட்டு நிதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் புதிய நிழற்குடை அமைக்கும் பணியை வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பெரம்பூர் எம்எல்ஏ ஆர்டி.சேகர், சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெயராமன்  மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: