கஞ்சா விற்பனை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்த நிருபரின் பைக் எரிப்பு

புழல்: கஞ்சா விற்பனை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்த தனியார் டிவி நிருபரின் பைக்கை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புழல் அருகே அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் கிறிஸ்துராஜன். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் டிவி நிருபராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்,  அறிஞர் அண்ணா நகர் பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து, அப்பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தனர்.

இதுகுறித்து கிறிஸ்துராஜன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரிகள் நேற்று அதிகாலை கிறிஸ்துராஜன் வீட்டுக்கு  வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக்கை தீ வைத்து எரித்தனர். இதில், அந்த பைக் முழுவதுமாக எரிந்து நாசமானது.  இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் பைக்கை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: