படத்தலைப்பு பதிவு இயக்குனர்கள் சங்கம் புதிய ஒப்பந்தம்

சென்னை: படத்தின் தலைப்பு பதிவு தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் இடையே இருந்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இயக்குனர்கள் தங்களின் கதைகளை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வந்தனர். இதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், தலைப்பு விவகாரங்களில் எழுத்தாளர்கள் சங்கம் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் கூறிய இயக்குனர்கள் சங்கம், ‘இனி இயக்குனர்கள் நமது சங்கத்திலேயே கதைகளைப் பதிவு செய்துகொள்ளலாம்’ என்று அறிவித்தது. இதுதொடர்பாக 2 சங்கங்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது. தற்போது இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், ‘எழுத்தாளர்கள் சங்க தலைவர் கே.பாக்யராஜ், இயக்குனர்கள் சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து, ‘அனைத்து பிரச்னைகளையும் சமூகமாக முடித்து தருகிறோம். எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆணிவேரான கதை பதிவை எங்கள் சங்கத்துக்கே தர வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், கட்டணங்களை கணிசமாக குறைப்பதாகவும் சொன்னார். கதை தொடர்பான பிரச்னை ஏற்பட்டால் தன்னிச்சையாக செயல்படாமல், உடனே பெப்சி அமைப்பினருடன்  இணைந்து செயல்படுவதாக சொன்னார். இதை இயக்குனர்கள் சங்கம் ஏற்றுக்கொண்டது. இனி இயக்குனர்கள் தங்கள் கதையை எழுத்தாளர் சங்கத்திலேயே பதிவு செய்யலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: