ராமரை தவறாக சித்தரிப்பதா? ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும்: தலைமை குரு ஆவேசம்

புதுடெல்லி: ராமாயண காவியத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம், ‘ஆதிபுருஷ்’. ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், சீதை கேரக்டரில் கிரித்தி சனோன், ராவணன் வேடத்தில் சைஃப் அலிகான் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர், டீசர், டிரைலர் ஆகியவை சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ராமர் கேரக்டரில் நடித்துள்ள பிரபாஸ், செங்கோட்டையில் நடந்த தசரா விழாவில் பங்கேற்று, ராவண பொம்மை ஒன்றை அம்பு விட்டு அழித்த காட்சி, அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் தலைமை குரு சத்யேந்திர தாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ‘ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாக சித்தரித்துள்ளனர். எனவே, இந்தப் படத்தின் வெளியீட்டை உடனே தடை செய்ய வேண்டும்’ என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். இதனால், வரும் பொங்கல் பண்டிகைக்கு இந்தப் படத்தை பல்வேறு மொழிகளில் திரையிட திட்டமிட்டுள்ள படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: