பனிச்சரிவில் பலியான மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்பு

டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் 41 பேர் கொண்ட மலையேற்ற குழுவினர் இமயமலையின் திரவுபதி கா தண்டா சிகரத்தில் இருந்து பயிற்சி முடித்து கடந்த செவ்வாயன்று முகாமுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, 17 ஆயிரம் அடி உயரத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் குழுவினர் சிக்கி கொண்டனர்.

முதல் நாளன்று 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும், 15க்கும் மேற்பட்டோர் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. பனிச்சரிவில் சிக்கி இருந்தால், அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.

Related Stories: