தேசிய பேட்மின்டன் பிரனீத் சாம்பியன்

சூரத்: தேசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில், தெலங்கானா வீரர் சாய் பிரனீத் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கர்நாடகாவின் மிதுன் மஞ்சுநாத்துடன் நேற்று மோதிய பிரனீத் 21-11, 12-21, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் சத்தீஸ்கரின் ஆகர்ஷி காஷ்யப் 21-8, 22-20 என்ற நேர் செட்களில் மகாராஷ்டிராவின் மாளவிகா பன்சோடை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தெலங்கானாவின் சிக்கி ரெட்டி - காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-14, 21-11 என்ற நேர் செட்களில் கர்நாடகாவின் ஷிகா கவுதம் - அஷ்வினி பட் இணையை வீழ்த்தியது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் கேரளாவின் ரவிகிருஷ்ணா - சங்கர்பிரசாத் ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் தமிழகத்தின் ஹரிகரன் அம்சகருணன் - ரூபன் குமார் இணையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றது. தமிழக ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் கர்நாடகாவின் சாய் பிரதீக் - அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-15, 21-13 என்ற நேர் செட்களில் டெல்லியின் ரோகன் கபூர் - கனிகா கன்வால் இணையை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

Related Stories: