இந்திய மாணவரும் படுகொலை

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் மாகாணத்தில் உள்ள புருடிவ் பல்கலைக் கழகத்தில் படித்த  இந்திய வம்சாவளி மாணவரான வருண் மணிஷ் செட்டா, நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். விடுதி அறையில் நடந்த இந்த கொலை தொடர்பாக, அவருடன் அதே அறையில் தங்கி படித்து வந்த கொரிய மாணவர் ஜிம் மின் ஜிம்மியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் ஆன்லைனில் வருண் கேம் விளையாடி உள்ளார்.  அப்போது, திடீரென அவர் வலியால் அலறும் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு கேம்  தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். வருண் உடல் முழுவதும் கத்திக் குத்து காயங்கள் உள்ளன. எனவே, ஆன்லைனில் சத்தம் போட்டு கேம் விளையாடியது பிடிக்காமல், கொரிய மாணவர் அவரை  கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், கொலைக்கான காரணத்தை போலீசார் கூறவில்லை.

Related Stories: