திருப்பதி புஷ்ப யாகம் ஆன்லைனில் டிக்கெட்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் புஷ்ப யாகத்தில் பங்கேற்க வரும் 10ம்  தேதி ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதம் ஸ்ரவணம் (திருவோணம்) நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கான புஷ்ப யாகம் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. கோயிலுக்குள் நடைபெறும் புஷ்ப யாகத்தில் பக்தர்கள் பங்கேற்பதற்காக வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் https://tirupatibalaji.ap.gov.in/#/login டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்’. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: