கதற விடும் டெல்லி ஆளுநர் என் பொண்டாட்டி கூட இப்படி திட்டினது இல்ல: முதல்வர் கெஜ்ரிவால் புலம்பல்

புதுடெல்லி: ‘ஆளுநர் சக்சேனாவை போல் என் மனைவி கூட என்னை திட்டியதில்லை’ என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் புலம்பியுள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநில ஆளுநராக சக்சேனா பதவி ஏற்ற நாள் முதல் தற்போது வரை, ஆம் ஆத்மிக்கும் அவருக்கும் இடையே தினம் தினம் மோதல்தான். பரஸ்பர குற்றசாட்டுகள், கடித போக்குவரத்துக்கு பஞ்சம் கிடையாது. இவை டெல்லி அரசியல் வட்டாரத்தை மற்றுமின்றி இந்திய அரசியலையும் கலக்கி வருகிறது. இந்நிலையில் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஆளுநர்  சக்சேனாவை போல்,  என் மனைவி கூட என்னைத் திட்டியதில்லை. கடந்த 3 மாதங்களில் அவர் எனக்கு கடிதம் எழுதியது போல் என் வாழ்க்கையில் என் மனைவி கூட அவ்வளவு காதல் கடிதங்களை எழுதியதில்லை...! தற்போது டெல்லி குளிர்காலத்தில் இருக்கிறது. பாஜ.வினரே... உங்கள் சூப்பர் பாஸையும் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்க  சொல்லுங்கள்,’ என்று கூறியுள்ளார். இது, வைரலாகி இருக்கிறது.

Related Stories: