75 ஆண்டுகளில் நடக்காத சாதனை காஷ்மீரில் பத்தே மாதங்களில் 1.62 கோடி சுற்றுலா பயணிகள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு  கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு பத்தே மாதத்தில் 1.62 கோடி சுற்றுலா  பயணிகள் வந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை தலை தூக்க விடாமல் ராணுவம் ஒடுக்கி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஊடுருவும் போதே அவர்களை சுட்டு தள்ளுகிறது. இதன் காரணமாக, தினமும் ஆங்காங்கு நடந்து வந்த தீவிரவாத தாக்குதல்கள் தற்போது எப்போதாவது ஒன்று, இரண்டு என்ற வகையில் மட்டுமே நடக்கிறது. இதன் காரணமாக, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, சகஜமான  வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

அதேபோல், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு, சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாகி இருக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது.

இந்நிலையில், கொரோனா பீதியால் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த சுற்றுலா பயணிகளின் வருகை, இந்தாண்டு தாறுமாறாக .உயர்ந்து இருக்கிறது. 2022ம் ஆண்டில் கடந்த ஜனவரியில் இருந்து இந்த மாதம் வரையிலான பத்தே மாதங்களில் 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு  வந்துள்ளனர். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 75 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்திருப்பது, இதுவே முதல் முறை. இது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

Related Stories: