கொச்சி அருகே நடுக்கடலில் சிக்கியது 200 கிலோ ஹெராயின்: ஈரான், பாகிஸ்தானியர் கைது

திருவனந்தபுரம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பெருமளவு போதை பொருள் கடத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பழங்களில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.1,476 கோடி மதிப்புள்ள போதை பொருள் மும்பையில் கைப்பற்றப்பட்டது.  இது தொடர்பாக கேரள மாநிலம், காலடி பகுதியைச் சேர்ந்த விஜின் வர்கீஸ் என்பவரை மும்பை கலால் துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த மன்சூர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொச்சி அருகே கடல் வழியாக ஒரு வெளிநாட்டு படகில் போதை பொருள் கடத்தப்படுவதாக கொச்சி கடற்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, கேரளா நோக்கி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த படகை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 200 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது. அவற்றை கைப்பற்றிய கடற்படையினர், படகில்  இருந்த ஈரான், பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

Related Stories: