காங்.கில் இருந்து விலகிய எம்எல்ஏ இரண்டே நாளில் பாஜ.வுக்கு தாவல்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் கால கட்சி தாவல்களும் அதிகரித்து வருகிறது. ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள விசவதார் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்ஷத் ரிபாடியா. இவர், படிதார் சமூக மக்களின் தலைவராக உள்ளார். கடந்த செவ்வாயன்று ஹர்ஷத் தனது காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று அவர் பாஜ.வில் இணைந்தார். காந்திநகரில் உள்ள பாஜ தலைமையகத்தில் மாநில பாஜ பொது செயலாளர் பிரதீப்சின் வகேலா முன்னிலையில் அவர் பாஜ.வில் இணைந்தார். ஜூனாகத் மாவட்ட காங்கிரஸ் தலைவர், துணை தலைவர், மெகசானா தாலுகா காங்கிரஸ் தலைவர், கிசான் மோர்சா தலைவர்கள் உள்ளிட்டோரும் அவரடன் பாஜவில் சேர்ந்தனர்.

Related Stories: