கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க உயர் தொழில்நுட்ப அமைப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

நாகர்கோவில்: காணாமல் போகின்ற மீனவர்களை கண்டுபிடிக்க இஸ்ரோவுடன் இணைந்து உயர் தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். நாகர்கோவில் சுங்கான்கடையில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அளித்த பேட்டி: கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காணாமல் போகும்போது அவர்களை தேடி கண்டுபிடிப்பதற்காக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையும், மீன்வளத் துறையும், இஸ்ரோ அமைப்பும் சேர்ந்து ஒரு உயர் தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வேலை இல்லாத இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: