100 நாள் வேலை பதிவேடு பராமரிக்காத ஊராட்சி செயலாளர், பொறுப்பாளர் சஸ்பெண்ட்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் பாலூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.13.63 லட்சத்தில் அடர்வன காடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. நேற்று காலை அங்கு நடந்த பணியை கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்ர். அப்போது பணியாளர்கள் வருகை பதிவேட்டை சரிவர பராமரிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட பாலூர் ஊராட்சி செயலாளர் முரளி, பணிதள பொறுப்பாளர் திவ்யா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பின்னர்,திருமலைகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளிக்கு சென்ற அவர், பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்காதது குறித்து பிடிஓ  சந்திரன், பணி மேற்பார்வையாளர் சாந்தகுமாரி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

Related Stories: