தேனாம்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய 2 கிலோ மற்றும் 5 கிலோ இலகு ரக சிலிண்டர்கள் அறிமுக விழா: அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய 2 கிலோ மற்றும் 5 கிலோ இலகு ரக சிலிண்டர்கள் அறிமுக விழாவில் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் சிறு வியாபாரிகளுக்கு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.  

இதன் முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் 5 சுயசேவைப் பிரிவுகள் மூலம் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இடம் பெயரும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு பயனளிக்கு வகையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வருகிறது.

2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு முன்னா எனவும், 5 கிலோ கேஸ் சிலிண்டருக்கு சோட்டு எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர்களை பெற வழக்கமான சிலிண்டர்கள் வாங்குவதற்கான நடைமுறை அல்லாமல் ஏதாவது ஒரு அடையாள அட்டை மட்டும் போதுமானது என அறிவுத்தப்பட்டுள்ளது.

Related Stories: