திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்டு சிகிச்சை பெற்று மாணவர்களை செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேரில் கண்டு நலன் விசாரிப்பு

திருப்பூர்: திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து சிகிச்சை பெற்று மாணவர்களை செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேரில் கண்டு நலன் விசாரித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது;

 

மூன்று மாணவர்கள் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தனர். நான்கு மாணவர்களுக்கு மட்டும் இன்னும் காய்ச்சல் குறையாத நிலையில் தனியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லமுறையில் சிகிச்சை வழங்கபட்டு குணமடைந்து வருகின்றனர். மீதுமுள்ள சிறுவர்கள் நல்லமுறையில் வீட்டுக்கு செல்லகூடிய அளவில் உள்ளனர்..

உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடல்கூராய்வு முடிந்த பின் தான் உணவில் ஏற்பட்ட கோளாறா வேறு ஏதாவது பிரச்சனையா என்பது தெரிய வரும். மூன்று பேர் இறப்பு என்பதுதான் வருத்தமாக இருக்கிறது

நேற்று முன்தினம் முதலே உணவில் தான் பிரச்சனை என அனுமானத்தின் மூலம் தெரிய வருகிறது.

காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருந்தால் மூவரின் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்- இது காலம்கடந்த வருத்தமான சூழ்நிலையாக இருக்கிறது. முதல்வர் சமூகநலத்துறை அமைச்சரை அனுப்பியுள்ளார். அவர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்வர் என தெரிவித்தார்.

Related Stories: