வள்ளலாரின் முப்பெரும் விழாவையொட்டி 'ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின்கீழ்'அன்னதானம் நடைபெறும் இடங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழக முதலமைச்சர் வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், நேற்றைய தினம் “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும்  சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வினையும் தொடங்கி வைத்தார்.  

அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சென்னையில் முதல் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

அன்னதானம் நடைபெறும் நாள் மற்றும் இடங்களின் பட்டியல். நாள் - இடம்

* 6.10.2022 முதல் 8.10.2022 வரை வசந்த மண்டப அறக்கட்டளை,எண்.90, நைனியப்பநாயக்கன் தெரு,  சென்னை-3 (கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோயில் அருகில்)

* 9.10.2022  முதல் 11.10.2022 வரை அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை.

* 12.10.2022  முதல் 14.10.2022 வரை வாசவி மகால், கிருஷ்ணப்ப அக்ரஹாரம் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை-79

* 15.10.2022  முதல் 17.10.2022 வரை அருள்மிகு குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில்,  கோயம்பேடு, சென்னை

* 18.10.2022 முதல் 20.10.2022 வரை    பட்டினத்தார் திருக்கோயில் மண்டபம், திருவொற்றியூர், சென்னை-19.

* 21.10.2022 முதல் 23.10.2022 வரை    அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை-15.

* 24.10.2022 முதல் 26.10.2022 வரை    அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில் மண்டபம், சூளை, சென்னை-112.

* 27.10.2022 முதல் 29.10.2022 வரை    அருள்மிகு சக்தி விநாயகர்  திருக்கோயில், கே.கே.நகர், சென்னை-78.

*30.10.2022 முதல் 1.11.2022 வரை    அருள்மிகு சீயாத்தம்மன் திருக்கோயில் மண்டபம் கொரட்டூர், சென்னை-80.

* 2.11.2022 முதல் 4.11.2022 வரை    அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் திருமண மண்டபம், கோட்டூர்புரம், சென்னை-85

மேற்கண்ட இடங்களில் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின்கீழ் அன்னதானம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: