பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப்பட்டியில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் விஜயதசமியான நேற்று சாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நடந்தது. முன்னதாக அச்சப்பன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து அச்சப்பன் சுவாமி, பரிவார தெய்வங்களுடன் காட்டுகோயிலில் எழுந்தருளினார்.

அங்கு கோயில் பூசாரிகள் சேர்வை அடித்து நடனமாடினர். பின்னர் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதன்பின்னர் அங்குள்ள மைதானத்தில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலமாக மண்டியிட்டு கைகளை உயர்த்தியவாறு அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் கோயில் பூசாரி சாட்டையால் அடித்தார்.

கோயில் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினால் தன்னை பிடித்திருந்த பேய் விலகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதேபோல் குழந்தை வரம், திருமண தடை, தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வரங்கள் கிடைக்குமென பக்தர்கள் நம்புகின்றனர்.

Related Stories: