சாலையோர முட்செடிகளால் விபத்து அபாயம்

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல்லிருந்து 36 கிமீ தொலைவில் வத்தலக்குண்டு உள்ளது. கடந்த 2010ல் ரூ.333.18 போடி மதிப்பில் திண்டுக்கல்-குமுளி வரையிலான இருவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது இப்பணி பெருமளவில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு இடையே சாலையின் இருபுறமும்  சீமைக்கருவேல முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் முட்செடிகளுக்கு பயந்து டூவீலர் ஓட்டுனர்கள் சாலையின் நடுவில் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக கனரக வாகனங்களில் சிக்கி டூவீலர் ஓட்டுனர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சேவுகம்பட்டி பிரிவு பகுதியில் முட்செடிகள் அதிகளவில் உள்ளன. இந்த இடத்தில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவு முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. டூவீலர் ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் நலன் கருதி, சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: